GLOSSARY

Speaker

The Speaker is the presiding officer of Parliament. He is elected by the House at the beginning of each new Parliament. He may be elected from among persons who are not Members or from among Members who are not Ministers or Parliamentary Secretaries. If he is not a Member, he must be at least someone who qualifies under the Constitution to stand for election as a Member. The Speaker regulates debates in the House and enforces the rules governing them. He calls upon Members to speak (see Catching the Speaker’s Eye). He proposes and puts the question for the House to debate and vote upon respectively. The Speaker is the guardian of the privileges of Parliament. Members look to him for guidance on matters of practice and procedure and he decides on points of order and gives rulings when required. The Speaker occupies the Chair when presiding over the sittings of the House, and leaves it to take the extreme right seat at the Clerk’s Table when chairing the Committee of the whole Parliament. He does not take part in the debates of the House or its Committees, but can exercise the right to abstain or to vote for, or against a motion. However, if he is elected from among persons who are not Members, he cannot vote. The Speaker has no casting vote. He holds office from the moment he is elected by Parliament until the first meeting of a new Parliament. (See also Parliament and Speaker’s Chair) Arts 40 and 42 of the CRS.

Speaker

Speaker adalah pegawai pengerusi sidang Parlimen. Beliau dipilih oleh Dewan pada permulaan setiap Parlimen yang baru. Speaker boleh dilantik dari kalangan bukan Anggota Parlimen atau dari kalangan Anggota yang bukan Menteri atau Setiausaha Parlimen. Jika bukan Anggota Parlimen, sekurang-kurangnya beliau mestilah layak di bawah Perlembagaan untuk bertanding sebagai Anggota Parlimen.

Speaker mengawal perbahasan dalam Dewan dan menguatkuasakan peraturan yang mengatur perbahasan. Beliau memanggil Anggota untuk berucap (Lihat Menarik Perhatian Speaker). Beliau mencadangkan soalan untuk dibahaskan oleh Dewan dan mengemukakan soalan untuk pengundian oleh Dewan. Speaker adalah penjaga hak istimewa Parlimen. Anggota mengharapkan bimbingannya tentang persoalan amalan dan prosedur dan beliau memutuskan perkara peraturan dan membuat keputusan bila perlu.

Speaker menduduki Kerusinya apabila mempengerusikan sidang Dewan, dan turun mengambil tempat duduk paling kanan di Meja Setiausaha apabila mempengerusikan Jawatankuasa seluruh Dewan. Beliau tidak ikut serta perbahasan dalam Dewan atau Jawatankuasa, tetapi boleh menggunakan hak untuk berkecuali atau mengundi menyokong atau menentang sesuatu usul. Namun, jika dipilih dari kalangan bukan Anggota, beliau tidak boleh mengundi. Speaker tidak memegang undi pemutus. Beliau memegang jawatan sejak dipilih oleh Parlimen hingga sidang pertama Parlimen yang baru.

(Lihat juga Parlimen dan Kerusi Speaker)

Perkara 40 dan 42 Perlembagaan Republik Singapura.

议长

国会会议由议长负责主持。议长是在新的一届国会会期开始时,由议员推举选出。他是从不担任部长、政务次长职务的议员中选出。议长不一定是国会议员才可以出任,但他必须是有资格竞选议员的新加坡公民。

议长执行国会议事条规,确保议员们遵守秩序。他决定谁先后发言(见引起议长注意)。议长提出议题让议员进行辩论和投票表决。议长是议会特权的监护人。议长提供有关国会规则和程序方面的指导,他执行条规并在必要时针对有关事项作出裁决。

开会时,议长坐在议长座位,在国会进入委员会阶段时,他会坐在秘书桌右边末端的位子上。议长不参与国会及委员会辩论,但可以就有关动议投票,他可投弃权票、赞成票或反对票。如果议长是由非议员人选受委,他不可以参与投票。议长没有投决定性一票的特权。国会选出议长后,议长将任职直到新一届国会成立。

(也见国会及议长席)

新加坡共和国宪法第40及42条款。

நாடாளுமன்ற நாயகர்

மன்ற நாயகர் நாடாளுமன்றத்திற்குத் தலைமைதாங்கும் அதிகாரி. ஒவ்வொரு புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கத்திலும் அவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். உறுப்பினர்கள் அல்லாதவர்களிலிருந்து அல்லது அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்றச் செயலாளர்கள் அல்லாத மற்ற உறுப்பினர்களிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர் உறுப்பினராக இல்லாவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது உறுப்பினராகத் தேர்தலில் நிற்கத் தகுதிபெற்ற ஒருவராகவாவது அவர் இருக்க வேண்டும்.


மன்றத்தில் நடைபெறும் விவாதங்களை மன்ற நாயகர் ஒழுங்குபடுத்துவதுடன் அவற்றைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவார். பேசுமாறு உறுப்பினர்களை அவர் அழைப்பார் (மன்ற நாயகரின் கவனத்தை ஈர்த்தலையும் பார்க்கவும்). மன்றம் விவாதிக்கவும் வாக்களிக்கவும் அவர் முறையே முன்மொழிந்து கேள்வியை மன்றத்தின் முன் வைப்பார். நாடாளுமன்றத்தின் சலுகைகளைக் கட்டிக்காப்பவர் மன்ற நாயகர். நாடாளுமன்ற பழக்கவழக்கம் மற்றும் நடைமுறை விதிகள் ஆகியவற்றில் அவரை வழிகாட்டியாக உறுப்பினர்கள் காண்பதுடன், ஒழுங்கு விதிமுறைகள் குறித்து அவர் முடிவு எடுப்பதுடன் தேவைப்படும்போது தமது முடிவுகளையும் கொடுப்பார்.


மன்றத்தின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்போது மன்ற நாயகர் தனக்குரிய நாற்காலியில் அமர்ந்திருப்பார், முழு மன்றக் குழுவிற்குத் தலைமைதாங்கும்போது அந்த நாற்காலியிலிருந்து அலுவலர் மேசையில் வலது புறமாக இருக்கும் ஆகக் கடைசி நாற்காலியில் குழுத் தலைவராக அமர்வார். மன்ற அல்லது குழு விவாதங்களில் அவர் பங்கு கொள்வதில்லை அல்லது ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்கும் அளிக்க மாட்டார். இருப்பினும், அவர் உறுப்பினர்கள் அல்லாதவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவரால் வாக்களிக்க முடியாது. மன்ற நாயகருக்கு ரத்து அதிகார (நீக்கதிகார) வாக்களிப்பு கிடையாது. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து புதிய நாடாளுமன்றத்தின் புதிய கூட்டம் வரை அவர் தமது பதவியை வகிப்பார்.

(நாடாளுமன்றம் மற்றும் மன்ற நாயகரின் இருக்கையையும் பார்க்கவும்)

சிங்கப்பூர்க் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 40 மற்றும் 42